ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? : முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்து நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது.
ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? : முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணை
x
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்து நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது, காவல் நீட்டிப்பு கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. 
 

Next Story

மேலும் செய்திகள்