ஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு

பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை  செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு
x
பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதள பயனாளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்காக, ஆதார் தரவுகளை ஃபேஸ்புக்கின் சுயவிவரங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அந்நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. பிற நீதிமன்றங்களில் தற்போது நடைபெற்று வரும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பேஸ்புக் நிறுவனம் தரப்பில் முகுல் ரோத்தகியும், வாட்ஸ் அப் சார்பில் கபில்சிபலும், மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து  எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்