டெல்லியில் அதிகாலை நடந்த தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்

டெல்லி ஜாகீர் நகர் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் அதிகாலை நடந்த தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்
x
டெல்லி ஜாகீர் நகர் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜாமியா மில்லா இஸ்லாமிய பல்கலைக் கழகம் அருகே அதிகாலை 2 மணிக்கு மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட இந்த விபத்தின் போது, அங்குள்ளவர்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த வந்த 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்து பற்றி அறிந்து மேல்தளங்களில் இருந்து உயிர் தப்பிக்க குதித்த 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் 8 கார் மற்றும் 7 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்