மும்பையில் மீண்டும் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மீண்டும் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
மும்பையில் கடந்த வாரம் மழை கொட்டி தீர்த்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ள நீர்  சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பேருந்து, ரயில், மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்