இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்

பானி புயல் ஒடிசாவில் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்
x
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி மாவட்ட  கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கிறது. அப்போது மணிக்கு 175 முதல் 186 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல, மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்