சீமான்ஜல் விரைவுரயில் தடம்புரண்டு 6 பேர் பலி : உயிரிழப்புகளுக்கு தலா ரூ. 9 லட்சம் நிவாரணம்

பீகாரில் சீமான்ஜல் என்ற அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில், 6 பேர் உயிரிழந்தனர்.
சீமான்ஜல் விரைவுரயில் தடம்புரண்டு 6 பேர் பலி : உயிரிழப்புகளுக்கு தலா ரூ. 9 லட்சம் நிவாரணம்
x
பீகாரில் சீமான்ஜல் என்ற அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில், 6 பேர் உயிரிழந்தனர். ஜோக்பானி- ஆனந்த விஹார் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள், ஏசி கோச் உள்ளிட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை, 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பீகாரில் ரயில் தடம் புரண்ட விபத்து உயிரிழப்புகளுக்கு தலா 9 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோக்பானி- ஆனந்த விஹார் பகுதியில்இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் ஏழு பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயிரிழப்புகளுக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. இ​தேபோல், பீகார் அரசு சார்பில் உயிரிழப்புக்கு தலா  4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்