4 ஆண்டுகளில் 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - மக்களவையில் மத்திய அமைச்சர்கள் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளில், 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
4 ஆண்டுகளில் 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - மக்களவையில் மத்திய அமைச்சர்கள் தகவல்
x
ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளில், 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஹன்ஸ் அஹீர் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில், 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆயிரத்து 213 தீவிரவாதிளுடன் மோதல்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில், 838 தீவிரவாதிகள் மற்றும் 183 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கி, மொத்தம் 316 துணை ராணுவ படை வீர‌ர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர், கிரண் ரஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்