மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா?

முத்தலாக் மசோதா மீதான விவாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெறுகிறது.
மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா?
x
முத்தலாக் மசோதா மீதான விவாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று  நடைபெறுகிறது. 

முஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது  அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. 

இதுதொடர்பான திருத்தப்பட்ட மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிபட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்பினர்களின் அமளியால் அவை முடங்கியது.  இதனால் விவாதம் நடைபெறவில்லை. இந்நிலையில் முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளா​​ர்.

இந்த தீர்மானம் மாநிங்களவையில் இன்று எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்