முத்தலாக் தடை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : அவையில் கட்சிகளின் பலம் என்ன?

முத்தலாக் தடை மசோதாவுக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த அவையில், கட்சிகளின் பலம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்...
முத்தலாக் தடை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : அவையில் கட்சிகளின் பலம் என்ன?
x
* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சிக்கு 73 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 6 பேரும், சிரோண்மணி அகாலி தளம், சிவசேனா கட்சிகளுக்கு தலா 3 பேரும், போடாலாந்து மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, குடியரசுக் கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 89 பேர் உள்ளனர்.

* இதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 62 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 50 பேரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 5 எம்.பிக்களும், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், கேரள காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 1 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

* அதேநேரம், இரண்டு கூட்டணிகளையும் சேராமல் தனித்து செயல்படக்கூடிய கட்சிகளின் பலம் மட்டும் 82 ஆக உள்ளது. இதில் அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு தலா 13 உறுப்பினர்களும், பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 9 பேரும்,  

* தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகளுக்கு தலா 6 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 3 பேரும், இந்திய கம்யூனிஸ்ட், காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, Y.S.R. காங்கிரஸுக்கு தலா 2 உறுப்பினர்களும், லோக் தள கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இடம்பிடித்துள்ளனர். மேலும், சுயேட்சை 6 பேரும், தேர்வு செய்யப்பட்டோர் 4 பேரும், ஒரு இடம் காலியாகவும் உள்ளது. 

மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்