தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் : சந்திரசேகரராவின் மகன் சூறாவளி சுற்றுப்பயணம்

தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்காக , முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகனும் அமைச்சருமான ராமராவ் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்
x
தெலுங்கானா மாநிலத்தில்  தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது . மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றி வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும், ஆளும் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி  கட்சிக்கும் காங்கிரசின் மெகா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது 

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தெலுங்கான ராஷ்டிரிய ஷமிதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

தெலுங்கான மாநிலம் கரித்தராபாத் தொகுதி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி வேட்பாளரை ஆதரித்து அவர் நேற்று பிரசாரம் செய்தார் , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அந்த  கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர் .

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால், தெலுங்கான ராஷ்டிரிய சமிதிக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் 
 
தெலுங்கான மாநிலத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் , எங்கு பார்த்தாலும் அரசியல்கட்சிகளின் கொடிகளும் சின்னங்களும் தான் காட்சி அளிக்கின்றன 

Next Story

மேலும் செய்திகள்