"ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது..." : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு
பதிவு : நவம்பர் 05, 2018, 01:30 PM
தீவிரமான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும், உச்சபச்ச எச்சரிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கும், டில்லியின் காற்று மாசு குறித்து பார்க்கலாம்
மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை, ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இந்த அளவீடு, 50-க்குள் இருந்தால் நல்ல காற்று. 51ல் இருந்து -100 என்ற அளவில் இருந்தால் திருப்தி.101ல் இருந்து -200 என்றால் மிதமானது, 201ல் இருந்து -300 என்றால் மோசமானது. 301ல் இருந்து -400 என்றால் மிக மோசமானது, 401ல் இருந்து -500 மிக மிக மோசமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், சமீபத்தில், தலைநகர் டெல்லியில் இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசின் காற்று தரக் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, 'சபார்' விடுத்துள்ள அறிக்கையில், "அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத் துணியினால் துடைத்துக்கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் வெளியே செல்கிற போது 'என்-95' முகமூடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருடத்தின், இறுதி மாதங்கள் வந்து விட்டாலே, டெல்லிக்கு கஷ்ட காலம்தான். காற்று மாசுபாட்டோடு பனியும் சேர்ந்து கொள்ளும் காலம் என்பதால், மூச்சு விடவே, பொது மக்கள் சிரமப்படுவார்கள்.  இந்த வருடம் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. 

தசரா பண்டிகையின் போது எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்தது. காற்று தர அளவீட்டின் மதிப்பு சராசரி 337 என்ற அளவில் இருந்தது. இது மிகவும் அபாயகரமான அளவீடாகும். முதன்முறையாக ஏற்பட்ட இந்த அளவீட்டையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது காற்று மாசு. நவம்பர் மாதத்தில் இதனை விட மோசமான நிலையை, டெல்லி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். 

நவம்பர் மாதம் தொடங்கி, 15-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அறுவடை முடிந்த பின்னர் மீதமிருக்கும் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது தொடர்ந்து  கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது காற்றின் நிலை, அபாய கட்டத்தை நெருங்கும் வாய்ப்பு அதிகம். எனவே, 'சிக்கலான நாள்களை எதிர்கொள்வதற்குத் தயார் படுத்திக்கொள்வது அவசியம்' என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டில்லி மக்களை உச்சபட்சமாக எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1069 views

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2622 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

456 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37892 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

42 views

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

29 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

42 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

28 views

வொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்

வொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது

4 views

ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்

கோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.