சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை
x
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு பந்தள அரச குடும்பம், தந்திரி, ஐயப்ப சேவா சங்கம், இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆரண்மூலாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. சபரிமலை அய்யப்பன் கோவில் ஐதீகத்தையும், சம்பிரதாயத்தையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முறையாக எடுத்துரைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்