அதிக மானியம் கொடுத்து உலக வர்த்தகத்தை சீர்குலைக்கிறது இந்தியா - அமெரிக்க வர்த்தக சபை குற்றச்சாட்டு

அரிசி, கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக அளவில் மானியம் கொடுத்து உலக வர்த்தகத்தை இந்தியா சீர்குலைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அதிக மானியம் கொடுத்து உலக வர்த்தகத்தை சீர்குலைக்கிறது இந்தியா - அமெரிக்க வர்த்தக சபை குற்றச்சாட்டு
x
உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், பேசிய அமெரிக்க வர்த்தக சபையின் தலைமை விவசாய பொருட்கள் கொள்முதல் அதிகாரி கிரகோரி டவுட் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். உலக வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை மட்டுமே ஆதரவு விலை வழங்க அனுமதி உள்ள நிலையில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 84 புள்ளி 2 சதவீதம் வரையிலும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 68 புள்ளி 5 சதவீதம் வரையிலும் ஆதரவு விலை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 

சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தை மீறி இந்தியா 10 லட்சம் கோடி ரூபாய் வரை விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அமெரிக்காவின் வர்த்தக நட்பு நாடான இந்தியா மீது முறையற்ற வர்த்தகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் கிரகோரி டவுட் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்