அதிகரிக்கிறதா குழந்தைகள் வன்கொடுமை?...

குழந்தைகள் வன்கொடுமை தொடர்பாக, கடந்த 3 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான அழைப்புகள் குழந்தைகள் உதவி மையத்திற்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கிறதா குழந்தைகள் வன்கொடுமை?...
x
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் அளிக்க, 1098 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில், 3 கோடியே 40 லட்சம் அழைப்புகள் வந்துள்ளது. அதில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் போனில் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்துள்ளனர். 

2015-16ல் 27 லட்சமாக இருந்த மவுன அழைப்புகள், 2017-18ல் 54 லட்சமாக அதிகரித்துள்ளது. 3 அழைப்புகளில் ஒன்று இதுபோன்ற மவுன அழைப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் பிரச்சினைகளை சொல்ல முடியாமல் தவிக்கும் இதுபோன்ற அழைப்பாளர்களிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசுமாறு உதவி மைய ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தை கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வழக்கில் ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்