500 பேரை மீட்க நடவடிக்கை- சுஷ்மா சுவராஜ்

நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 500 யாத்ரீகர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
500 பேரை மீட்க நடவடிக்கை- சுஷ்மா சுவராஜ்
x
நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 500 யாத்ரீகர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட தகவலில், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நோபள அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், மீட்புப் பணிக்கு அந்நாட்டு அரசிடம் ஹெலிகாப்டர் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்