8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்

சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்
x
சேலம் - சென்னை இடையே  8 வழி பசுமைசாலை அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 3 நாட்களாக 
நிலம் அளவீடு மற்றும் முட்டுக்கல் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சேலம் மாவட்டத்தில்  மஞ்சவாடியில் துவங்கி அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி குப்பனூர் வழியாக சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டுக்கல் நடும் பணிகள் நிறைவுற்றன.

இரண்டாவது கட்டமாக வெள்ளியம்பட்டி தொடங்கி குள்ளம்பட்டி , மின்னாளம்பள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்