"இதை நான் எதிர்பார்க்கவில்லை" - நடிகர் சிம்பு

மாநாடு திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி தனக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல எனவும் தமிழ் சினிமாவிற்கே கிடைத்த வெற்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
x
மாநாடு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் 100 ஆவது நாள் விழா சென்னை, கோயம்பேட்டில் உள்ள திரையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. 

இதில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தனக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல எனவும் தமிழ் சினிமாவிற்கே கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்