நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு - உயர் நீதிமன்றம் கேள்வி

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற  சம்பவத்தை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றார்.  மகா காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகா காந்தி கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவர் இன்னும் சிகிச்சையில் இருப்பதாகவும், சம்பவம் பெங்களூருவில் நடந்தாலும் கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மகா காந்தி தரப்பு வழக்கறிஞர், புகார் அளிக்கப்பட்டது எனவும் ஆனால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டதாக கூறினார். 

அப்போது குறிக்கிட்ட நீதிபதி கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்டது என்றால் இது தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையரிடமோ  அல்லது உயர் அதிகாரிகளிடமோ புகார் அளித்தீர்களா என கேள்வி எழுப்பினார்.  இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு விசாரணைக்கு இடைகாலத் தடை விதித்த நீதிபதி, விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 




Next Story

மேலும் செய்திகள்