நடிகர் சிம்பு இனி.... 'டாக்டர்' சிம்பு

நடிகர் சிம்புவின் கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது, வேல்ஸ் பல்கலைக்கழகம்... இந்நிலையில், நடிகர் சிம்பு கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சிம்பு இனி.... டாக்டர் சிம்பு
x
நடிகர் சிம்புவின் கலையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது, வேல்ஸ் பல்கலைக்கழகம்... இந்நிலையில், நடிகர் சிம்பு கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

கொடி கட்டி பறந்த உச்ச நட்சத்திரத்தை திடீரென தேடும் நிலைக்கு சென்றது தமிழ் திரையுலகம்... ஆனால் ரஜினி ஸ்டைலில் "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" என கெத்தாக கம்பேக் கொடுத்து அசத்தியவர், நடிகர் சிம்பு...

பல தடைகளை கடந்து ஒரு வழியாக தனது மாநாடு  படத்தை ரீலிஸ் செய்வதில் வெற்றி கண்ட சிம்பு... தனது கன கச்சிதமான நடிப்பின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். 

காதலால் சர்ச்சை... படப்பிடிப்பில் சர்ச்சை... படத்தை வெளியிடுவதில் சர்ச்சை என சர்ச்சைகள் இவருக்கு ஒன்றும் புதிதல்ல... 6 மாத கைக்குழந்தையாக தந்தை டி.ஆர்.ராஜேந்தர் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான குழந்தை நட்சத்திரம்... 

சிறுவயதிலேயே, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற முத்திரையை பதித்தது... 

நடிப்பு திறன் மட்டுமின்றி, பஞ்ச் வசனங்களாகட்டும், நடனமாகட்டும், பின்னி பெடல் எடுத்து அப்பவே "லிட்டில் சூப்பர்ஸ்டாராக" வலம் வந்தவர் சிம்பு... 

2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிம்பு...  அதன் பிறகு அடுத்தடுத்து வெளிவந்த படங்களில்  தலையில் பேண்ட் அணிவது, விரல் வித்தை என்பது சிம்புவின் டிரேட் மார்க்கானது... 

சிம்புவை பட்டி தொட்டிக்கெல்லாம் எடுத்து சென்ற ஆண்டு 2004...  கிராமிய காதல் கதை "கோவில்", குத்து, மன்மதன் என அடுத்தடுத்து வெளியான படங்களால் பெரிதளவில் பேசப்பட்டார் சிம்பு...



Next Story

மேலும் செய்திகள்