வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது இல்லத்தின் முன்பாக திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
x
புத்தாண்டன்று ரஜினிகாந்தைப் பார்ப்பதற்காக, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு, ரசிகர்கள் காத்து இருந்தனர். இதனையறிந்து, தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி மகிழ்ச்சி பொங்க கையசைத்தார். அப்போது அவரது, ரசிகர்கள் உற்சாக குரலெழுப்பி ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்