பிசாசு-2' படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி - "சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டது ஏன்?"

மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
பிசாசு-2 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி - சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டது ஏன்?
x
மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி, மிஷ்கினின் சைக்கோ திரைப்படம் பார்த்து பிரமித்து போனதாக கூறியுள்ளார். ஒருநாள் மிஷ்கினை சந்தித்து பேசிய போது, பிசாசு-2 படத்தின் கதையை கூறியதாகவும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் மிஷ்கினுடன் பணியாற்றும் போது பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்