முழு ஊரடங்கு எதிரொலி - நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் நிதியுதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
x
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்ச ரூபாயும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50 ஆயிரம் ரூபாயும், நடிகை லதா 25 ஆயிரம் ரூபாயும், நடிகர் விக்னேஷ் 10 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய பணம் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்