"உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வது அவசியம்" - திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வது அவசியம் - திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை
x
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கியூப் மற்றும் யு.எஃப்.ஓ கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்தி வரும் நிலையில், இனிமேல் அதனை தங்களால் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியரங்குகளின் பங்கு விகிதங்களை முறைப்படுத்தி, ஒவ்வொரு பட்ஜெட் படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போல், திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில், தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் எனவும், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பகுதி தரப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தரமான படங்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் உடனே நிறுத்தி விடுவது வேதனைக்குரியதாகும். இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், அரசாங்கத்தின் அனுமதியோடு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என, அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்