டி.இமான் இசையில் சினிமாவில் பாடிய திருமூர்த்தி

'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகப்படுத்தி உள்ளார்.
டி.இமான் இசையில் சினிமாவில் பாடிய திருமூர்த்தி
x
'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகப்படுத்தி உள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'சீரு' திரைப்படத்தில், செவ்வந்தி... என தொடங்கும் பாடலை திரு​மூர்த்தி பாடியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை டி.இமான் வெளியிட்டுள்ளார். அதில், அனுதாபத்தால் மட்டும் இந்த பாடலை கேட்க வேண்டாம் என்றும், பாடலும் அவருடைய குரலும் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
==


Next Story

மேலும் செய்திகள்