நடிகர் ரஜினியுடன் கேரள இளைஞர் பிரணவ் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார்.
நடிகர் ரஜினியுடன் கேரள இளைஞர் பிரணவ் சந்திப்பு
x
நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில், கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார். இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், கேரளாவை சேர்ந்தவர். சமீபத்தில் இவர் கேரள முதல்வரை சந்தித்து, வெள்ள நிவாரண நிதி வழங்கினார். அந்த நிதியை தனது இரு கால்கள் மூலமாக வழங்க, அதனை கேரள முதல்வர் பெற்றுக் கொண்டதோடு, அந்த இளைஞரை வணங்கிய காட்சி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது . அந்த இளைஞர் திங்கட்கிழமையன்று, மாலை நடிகர் ரஜினிகாந்தை, அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். அப்போது ரஜினியுடன் பிரணவ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேலும், இளைஞரின் சமூக ஆர்வத்தை ரஜினி வெகுவாக பாராட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்