இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது.
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது.  நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசனின் மகள்கள், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்