எப்படி இருக்கிறது 'சீமராஜா' ?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’.
எப்படி இருக்கிறது சீமராஜா ?
x
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’. இந்த படத்தில் சீமராஜாவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், அவருக்கு ஜோடி சமந்தா. வில்லன் வேடங்களில் மலையாள நடிகர் லால் மற்றும் நடிகை சிம்ரன் நடித்துள்ளனர். நெப்போலியன் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.   

படத்தின் கதை என்ன...?

சிங்கம்பட்டி ராஜவம்சத்தை சேர்ந்த நெப்போலியனுக்கு அந்த ஊரில் வருடா வருடம் பரிவட்டம் கட்டி அழகு பார்ப்பார்கள். ஆனால் அதை எட்டு வருடங்களாக பல்வேறு பிரச்சினைகள் செய்து புளியம்பட்டியை சேர்ந்த வில்லன் குரூப் (மலையாள நடிகர் லால் மற்றும் அவரது மனைவி சிம்ரன்) முறியடித்து வந்தனர். ஒரு கட்டத்தில் நடிகர் நெப்போலியனை அந்த ஊர் விவசாய பிரச்சினையை வைத்து அவமானப் படுத்துகிறார்கள் புளியம்பட்டிகாரர்கள். இதனால் மனமுடைந்து மாரடைப்பில் இறக்கிறார். இன்னொருபுறம், சிவகார்த்திகேயன் காதலிக்கும் பெண் (சமந்தா) வில்லனுடைய மகள் என்று தெரியவருகிறது. மிகுந்த சோகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தாத்தா ராஜ வம்சத்தின் "கடம்ப வேல் ராஜா" வரலாற்றுக் கதையை கூறுகிறார். இதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது ராஜ கௌரவத்தை எப்படி நிலைநாட்டுகிறார், தனது காதலியை எப்படி மீட்கிறார் என்பதே கதை. 

கடைக்குட்டி சிங்கத்தில் சூரி-கார்த்திக் கூட்டணி எப்படி சிறப்பாக அமைந்ததோ அதே போல் இதிலும் சிவகார்த்திகேயன் - சூரி நகைச்சுவை சிரிப்பு மழை தெறிக்க விடுகிறது. சிவகார்த்திகேயன் இந்த முறை நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் அவரை மேம்படுத்திக்கொண்டுள்ளார். சமந்தா அழகான பள்ளிக்கூட உடற்பயிற்சி டீச்சராக, மாணவர்களுக்கு சிலம்பம் சொல்லிக் கொடுக்கிறார். தனக்கே உரிய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 14 ஆம் நூற்றாண்டு தமிழ் மன்னன் கடம்ப வேல் ராஜாவாக வரும் சிவகார்த்திகேயனுக்கு ராணியாக சிறப்பு தோற்றத்தில் வருகிறார் கீர்த்தி சுரேஷ். வரலாற்று காட்சிகளில் கிராபிக்ஸ் அம்சங்களை அருமையாக காண்பித்துள்ளனர். வில்லியாக வரும் சிம்ரன்-சிவகார்த்திகேயன் காம்பினேஷன் புதுமை.

 
மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் சிம்ரன் நடிப்பில் அசத்தியுள்ளார்.
ஆனால்,முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு பெறுகிறது. பின்னர் மீண்டும் வரலாற்றுக் கதையை சொல்லும்போது வேகம் எடுக்கிறது.

சீமராஜா ஏமாற்றவில்லை...


Next Story

மேலும் செய்திகள்