அதிமுகவுக்கு ஷாக் கொடுத்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி - அனல் பறக்கும் களம்

x

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை அண்ணாமலை மற்றும் எல்.முருகன் வழங்கினர். மாற்று அரசியல் தேவை என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக, அனுஷா ரவி தெரிவித்தார். பாஜகவின் கரத்தை வலுப்படுத்த போராடுவோம் என்ற முத்துராமலிங்கம், பாஜக சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்