கள்ளச்சந்தையில் படு ஜோர்..முட்டை,சத்துமாவுக்கு FIXED Rate - வீடியோவில் சிக்கிய ஆயா..

x

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் சத்து மாவை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சலவாதி மின் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் மகேஸ்வரி என்பவர், ஒரு பாக்கெட் சத்துமாவை 25 ரூபாய்க்கும், ஒரு முட்டையை 3 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்