மாணவிகளை தாக்கிய ஆசிரியை... பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

x

தூத்துக்குடியில், அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியை தாக்கியதில் 2 மாணவிகள் காயமடைந்த நிலையில், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்ஜ் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பியூலா என்பவர், வீட்டு பாடம் செய்யாத 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 2 மாணவிகள் காயமடைந்தனர். பள்ளி ஆசிரியை பியூலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்