13 நிமிடத்தில் 42 செய்திகள் | தந்தி மாலை செய்திகள் | Speed News | (23.03.2023)

x
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 விசைப்படகுகளுடன், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளார்.
  • தமிழ்நாடு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்துறையில் ஜவுளி வர்த்தகம் முக்கியமானது என்றும், கைத்தறி வர்த்தகத்தில் தமிழ்நாடு 3ல் ஒரு பங்கு வைத்துள்ளதாகவும் கூறினார்.
  • பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தானும், பிரதமர் மோடியும் அழைக்கப்படுவோம் என எதிர்பார்ப்பதாக கூறினார். அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • நாடு முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவமனைகள் அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய, மாதிரி ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்