செஸ் போட்டியில் அசத்திய தமிழக இளம் வீரர் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | MK Stalin | Gukesh

x

சர்வதேச செஸ் ரேட்டிங்கில் முன்னேற்றம் கண்ட தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நார்வேயில் நடைபெற்றுவரும் சர்வதேச செஸ் தொடரின் நான்காம் சுற்றில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனிடம் குகேஷ் போராடி தோல்வி அடைந்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்ட குகேஷ், 2 ஆயிரத்து 739 புள்ளிகளுடன் 16வது இடத்தில் உள்ளார். இது, அவரது கேரியரில் அதிகபட்ச ரேட்டிங் ஆகும். இந்நிலையில், ரேட்டிங்கில் முன்னேறிய குகேஷ், சென்னையை தொடர்ந்து பெருமைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்