தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலவர் ஸ்டாலின்

x

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காலநிலை மாற்ற நிர்வாக‌க் குழுவில், பல்துறை வல்லுநர்கள், பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு அறிவியலாளர்களும், துறை செயலாளர்களும் உரையாற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து 9ஆம் தேதி மாலையில், காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காலநிலை மாற்ற நிர்வாக‌க் குழுவில், பல்துறை வல்லுநர்கள், பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு அறிவியலாளர்களும், துறை செயலாளர்களும் உரையாற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து 9ஆம் தேதி மாலையில், காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்