யாசகம் பெற்று வந்த முதியவரை ஒரு நொடியில் மாற்றிய சூரி ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ | Soori Fans

x

நடிகர் சூரி ரசிகர் மன்றத்தினர் சாலைகளில் யாசகம் பெற்று வந்த முதியவரைக் குளிப்பாட்டி, புத்தாடைகள், மற்றும் உணவு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் புரோட்டா சாப்பிடும் காட்சி வாயிலாக பிரபலம் அடைந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி... இவர் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களும் நடத்தி வரும் நிலையில், இவருடைய ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்

மதுரை தெருக்களில் குப்பைகள் எடுத்து யாசகம் பெற்று வந்த முதியவரை அழைத்துச் சென்று முடி வெட்டி, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து மகிழ்ந்த சூரி ரசிகர் மன்றத்தினர், நடிகர் சூரி ஸ்டைலில், முதியவருக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்