"அழகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

x

திருப்பூர், அழகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அழகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி தாக்கல் செய்த மனுவில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாகவும், தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் ஏதுமில்லாத நிலையில், மதுரையில் இருந்து காளைகளையும், சிவகங்கையில் இருந்து மாடு பிடி வீரர்களையும் வரவழைத்து வணிக ரீதியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டிற்காக அலகுமலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழைய மரங்கள் அகற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், போட்டி நடத்தப்படும் போது கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்