பள்ளி விடுதியில் சாப்பிட சென்றபோது மயங்கி விழுந்து மாணவன் மரணம்

x

கரூரில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அருகே காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி விடுதி வளாகத்தில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட சென்றபோது, சந்தோஷ் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்