"செஸ் ஒலிம்பியாட்டில் பாகிஸ்தான் அரசியல் செய்கிறது"-வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சனம்

x

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகி, பாகிஸ்தான் அரசியல் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் விமர்சித்து உள்ளது.செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்கள் சென்னை வந்திருந்தனர். எனினும் கடைசி நேரத்தில் செஸ் ஒலிம்பியாடில் இருந்து பாகிஸ்தான் விலகியது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டதை சுட்டிக்காட்டி போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசியல் செய்துள்ளதாக விமர்சித்துள்ள பக்‌ஷி, ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்