நீலகிரி ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லி நபர் தஞ்சையில் கைது

x

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லியை சேர்ந்த நபர் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தின் செல்போனுக்கு, கடந்த ஜூலை மாதம் மர்மநபர் ஒருவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரான டெல்லியை சேர்ந்த நிதின் சர்மாவை தஞ்சாவூரில் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்