திடீரென மாயமான கோடிக்கணக்கான Facebook ஃபாலோயர்கள் - அதிர்ச்சியில் உறைந்து பிரபலங்கள்

x

உலகளாவிய சமூக ஊடகமான ஃபேஸ்புக் -கின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை திடீரென பெரும் சரிவை சந்தித்தால் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

இளைஞர்கள் தொடங்கி முதியவர்வரை முகநூலில் முழிப்பதையே காலைக்கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்கள் படும் பாடும் படுத்தும் பாடும்...சொல்லி மாலாது....!

ஃபேஸ்புக் இல்லை என்றால், மூச்சு விடுவதைக்கூட நிறுத்திவிடுவார்கள் போல... அந்த அளவுக்கு ஃபேஸ்புக்கிலேயே காலையில் இருந்து இரவு நெடுநேரம்வரை தவம் கிடக்கும் கோடிக்கணக்கான சமூக ஊடக அன்பர்கள் அனைவரும் ஒரு நாள் இரவில் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள்.

காரணம், லட்சக்கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருந்த வர்களுக்கு, நேற்று இரவு முதல் வெறும் ஒன்பதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக காட்டியது.

முதலில், தங்களுக்குதான் இந்தப் பிரச்னை என வழக்கம் போல, ஒரு புலம்பல் இடுகையைப் பதிவுசெய்து விட்டு, விருப்பக் குறியீடுகளுக்காக காத்துக்கிடந்தவர்களுக்கு பதில் பதிவுகள் விவகாரம் விபரீதமடைந்துவிட்டதை உணர்த்தியது.

பதில் பதிவுகளில் பலரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதே 9 ஆயிரத்தை காட்டுவதாக குறிப்பிட அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் ஃபேஸ்புக் பிரபலங்கள்.

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் கின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க்குக்கே, வாடிக்கையாளர் எண்ணிக்கை அதே ஒன்பதாயிரத்துக்கும் குறைய...அசுர வேகத்தில் செயல்படத்தொடங்கியது, ஃபேஸ்புக் பொறியாளர் அணி.

சில மணி நேரங்களுக்குள் ஃபேஸ்புக் மின்னஞ்சல், வாடிக்கையாளர் சேவைப் பகுதி முழுக்க முறையீடுகளால் நிரம்பிப்போனது.

முதலில், போலி ஃபேஸ்புக் கணக்காளர்களைக் குறைத்து வருவதால்தான் இப்படி வாடிக்கையாளர்களின் எண்ணிக் கை குறைவதாகக் கூறப்பட்டது. மார்க்குக்கே அந்த கதியா என கேள்வி எழ... ஒருவழியாக ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில் நுட்பப் பழுது சரிசெய்யப்பட்டது என்கிறது, அண்மைத் தகவல்!


Next Story

மேலும் செய்திகள்