மொத்த ஆடுகளையும் லாரியில் தூக்கி சென்ற திருடர்கள் - கதறிய உரிமையாளர்

x

திருச்சி அருகே காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மறி ஆடுகளை 7 பேர் கொண்ட கும்பல் திருடி சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுகனூர் கிராமத்தை சேர்ந்த ராமர் அரசு மானிய திட்டத்தின் கீழ், செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆடுகள் இருந்த பட்டி அருகே படுத்திருந்த ராமரை கட்டிலுடன் சேர்த்து கட்டிப்போட்ட 7 பேர் கொண்ட கும்பல், 29 செம்மறி ஆடுகளை திருடி சென்றனர்.

ஆடுகளை இழந்து கதறிய ராமர், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை லாரியில் ஏற்றி சென்றதாக போலீசில் புகார் அளித்தார்.

https://youtu.be/wHgz7jeMTjY6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 173 செம்மறி ஆடுகள் திருடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்