பக்ரீத் பண்டிகையில் வெளியாகும் 'மாமன்னன்'?

x

'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகர் வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தை பக்ரீத் பண்டிகையொட்டி, ஜூன் 29ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக, கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்