சயனைடு கலந்த மது... டாஸ்மாக் பாரில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்

x

தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்ததில் இருவர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சை கீழவாசல் டாஸ்மாக் பாரில், கடந்த 21ம் தேதி காலை 11 மணிக்கு மீன் வியாபாரி குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் மது குடித்து மயங்கி விழுந்து இறந்தனர்.

அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது பிரேத பரிசோதையில் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

10 நாட்களுக்கு மேலாகியும் இருவரும் குடித்த மதுவில் சயனைடு எப்படி கலக்கப்பட்டது என துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பாரில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3 மாதங்களாக பழுதாக உள்ளதாக, பார் உரிமையாளர்களும் பணியாளர்களும் தெரிவித்திருந்த நிலையில், சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்-ஐக் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்