ஒரே வீட்டை 30 பேருக்கு காட்டி 2 கோடியை சுருட்டிட்டு ஓடிய கில்லாடி இடைத்தரகர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருப்பூர் மாவட்டத்தில் சினிமா பாணியில் ஒரே வீட்டை பலருக்கும் காண்பித்து 30 க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் அருகே மங்கலம் சாலை பகுதியில் வசித்து வருபவர் நவாஸ். இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், வீடு வாங்க, விற்க தன்னை அனுகவும் என கூறி சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதன் மூலம் இவரை பலரும் தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்பு கொண்டவர்களுக்கு பல்லடம் மின்நகர் பகுதியில் உள்ள ஒரு புதிய வீட்டை காண்பித்து குத்தகைக்கு தயராக உள்ளது என கூறி 3 லட்ச ருபாய் முன் தொகையாக பெற்றதாக கூறப்படுகிறது. இதே போல் மர்ம நபர் ஒருவரை வீட்டின் உரிமையாளர் என்று செட்டப் செய்து 30 க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களில் நவாஸ் தலைமறைவானதை அடுத்து பணம் கொடுத்தவர்கள் நாவாஸை தேடியுள்ளனர். இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த நவாஸை கண்டுபிடித்த பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 30 க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நவாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்