மேல் பக்கம் தக தகன்னு 500 ரூபாய்.. கட்டு கட்டாக ரூ.3 கோடி டம்மி நோட்டுகள்.. ஷாக் கொடுத்த நிதி நிறுவன உரிமையாளர்

x
  • சிவகங்கை மாவட்டத்தில் 500 ரூபாய் நோட்டுகளை மேல்புறம் வைத்து, சுமார் 3 கோடி மதிப்பிலான டம்மி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
  • காரைக்குடி அருகே முத்துப்பட்டணத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் அன்பழகன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது மகனின் இதய அறுவை சிகிச்சைக்காக 10 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார்.
  • இதற்கு, 5 லட்ச ரூபாய் பணத்தை முன்பணமாக கொடுத்தால், அதையும் சேர்ந்த்து 15 லட்ச ரூபாயாக திருப்பி தருவதாக அன்பழகன் கூறியுள்ளார்.
  • இதை நம்பி தனது நகைகளை விற்று 5 லட்ச ரூபாயை மகாலட்சுமி கொடுத்த நிலையில், கடன் வழங்காமல் அன்பழகன் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், அன்பழகன் மீது மகாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவரை கைது செய்த போலீசார், நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
  • இதில், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை மேல்புறம் வைத்து, சுமார் 3 கோடி மதிப்பிலான டம்மி ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றிய நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்