"கல்யாணத்துக்கா போறீங்க.." பெண்கள் பல்கலை.-இல் படிக்க இடைக்கால தடை - தாலிபன்கள் அதிரடி | taliban

x

ஆப்கான் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் படிக்க இடைக்கால தடை விதித்தது ஏன் என தலிபான் அரசு விளக்கமளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான உரிமைகளை தலிபான் அரசு கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன... சமீபமாக ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பெண்களுக்கு அனுமதி மறுத்து தலிபான் அரசு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தலிபான் அரசு விளக்கமளித்துள்ளது... இது குறித்து பேசிய தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சரான நேதா முகமது நதீம், பெண்கள் இஸ்லாமிய வழிமுறைகளை புறக்கணிப்பதாகவும், ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத ஆப்கான் பல்கலைக்கழக மாணவிகள் திருமணத்திற்கு செல்வது போல் உடையணிந்து செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்... அத்துடன் சில அறிவியல் பாடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக இல்லை என தெரிவித்த அவர், பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம், மற்றும் ஆப்கானிய கலாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்