பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா... ஒரே நாளில் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்

x

காமன்வெல்த் விளையாட்டில் நேற்று ஒரே நாளில் இந்திய வீர‌ர்கள் 14 பதக்கங்களை குவித்துள்ளனர். மல்யுத்தம், குத்துச்சண்டை, பாரா டேபிள் டென்னிஸ், தடகளம் மற்றும் லாங் பவுலிங் போட்டிகளில், 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். இதுவரை, 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. 155 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 148 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன. 84 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் கனடா, 44 பதக்கங்களுடன் நியூசிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன. நாளையுடன் காமன்வெல்த் போட்டி நிறைவுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்