பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

x

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி திருநாளில் சொந்த ஊர்களுக்குச் சென்ற திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 19ஆம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்