அதிரடி ஆட்டக்காரர் அசாருதீனை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா | Mohammad Azharuddin | Rohit Sharma

x

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில், அசாருதீனை முந்தி ரோகித் சர்மா 6-வது இடத்தை பிடித்தார். முன்னாள் இந்திய வீரர் அசாருதீன் 9 ஆயிரத்து 378 ரன்கள் எடுத்துள்ள நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அசாருதீனை முந்தினார். ரோகித் சர்மா இதுவரை 9 ஆயிரத்து 403 ரன்களை எடுத்து, பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் டெண்டுல்கர் முதலிடத்திலும், 12 ஆயிரத்து 353 ரன்களுடன் கோலி 2-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்