நெருங்கும் பக்ரீத் பண்டிகை சந்தையில் பரபரக்கும் ஆடுகள் விற்பனை..எத்தனை கோடி தெரியுமா ? | Bakrid

x

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

நாமக்கல் ஆட்டுச் சந்தைக்கு, கரூர், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். குறைந்தபட்சம் ஒரு ஆடு, 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை விற்பனையாகின

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில், சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகமானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, குறும்பாடு, உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். குட்டி ஆடுகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள், 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின


Next Story

மேலும் செய்திகள்