"எல்லோருமே உதய சூரியனுக்கா போட்டிங்க?" மூதாட்டியிடம் ஒருமையில் பேசிய நகராட்சி தலைவர் - தீயாய் பரவும் வீடியோ

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், சாலையோரம் பழம் விற்கும் மூதாட்டியிடம் திமுக நகராட்சி தலைவர் ஒருமையில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காங்கேயம் பிரதான சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் காய்கறி, பழங்களை விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலையோர சிறு வியாபாரிகளால், பெரிய வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துமாறும் நகராட்சி தலைவரான சூர்யபிரகாஷ் இடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்த‌தாக தெரிகிறது. இதையடுத்து, உடனடியாக களத்தில் இறங்கிய காங்கேயம் நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ், அதிகாரிகள் படையுடன் சென்று சாலையோர சிறு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சாலையோரம் பழம் விற்கும் மூதாட்டி ஒருவர், நாங்கள் ஓட்டு போட்டுதானே பதவிக்கு வந்தீர்கள், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மூதாட்டி பேசியதை கேட்டு கடும் ஆத்திரம் அடைந்த நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ், நீங்க எல்லோரும் உதய சூரியனுக்கா ஓட்டு போட்டிங்க? என ஒருமையில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 100 நாள் வேலைக்கு சென்றால், சும்மாவே இருந்து 300 ரூபாய் வாங்கிட்டு போக வேண்டியது தானே என பழம் விற்கும் மூதாட்டிக்கு அறிவுரை வழங்கி சென்றார் திமுக நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ்.


Next Story

மேலும் செய்திகள்